ஒட்டக்கூத்தர்

தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற்றவர் ஒட்டக்கூத்தர்

தமிழைத் தவறாக உரைக்காதீர்கள்

சோழ நாட்டின் மன்னன் குலோத்துங்க சோழனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர் கவி ஒட்டக்கூத்தர். இவர் தமிழ்ப்பற்று மிக்கவர், புலமையில் கரைகண்டவர். தானும் தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் அவரைச் சிறையிலடைத்து விடுவார். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களுக்குப் பிழைக்க ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அது யாதெனில், ஒட்டக்கூத்தர் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சரியான பதில் தந்தால் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவர். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார் அதாவது இருவரது தலைகளையும் வெட்டிவிடச் செய்வார். இதனாலேயே தான் ஒரு புலவன் என்று முறையாகத் தமிழ் பயிலாத எவரும் கூறிக்கொள்வதில்லை.

பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். வில்லிபுத்தூராழ்வார் எனும் பிரசித்திபெற்ற புலவர் பிற புலவர்களை வாதிற்கு அழைத்து, வாதில் வர்கள் தோற்றால் அவர்களது காதை அறுத்துவிடுவாராம். மஹாபாரத காவியத்தை வில்லிபாரதம் எனும் கடின நடையிலமைந்த தமிழ்ப் பாடல்களாக எழுதியவர் வில்லிபுத்தூராழ்வார்.

இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டுப் போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று எடுத்துரைக்கிறது (இடித்துரைக்கிறது)

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே


என்ற செய்யுள்.

Comments:
அருமையான பாடலைத் தந்தீர்கள்.மிக்க நன்றி!
நீங்கள் கட்டாயம் நேரம் கிட்டும் போது, என் "மரபுக் கவிதையும் புதுக்கவிதையும்" கட்டுரை படித்துக் கருத்துjohan-paris.blogspot.com/2006/12/blog-post_07.htmlக் கூற வேண்டுகிறேன்.
 

நல்ல பதிவு.. நீங்க சொன்னது மிகச் சரி , இப்பொழுது எல்லாம் கேட்க ஆள் இல்லாத காரணத்தினால் எழுதுவதெல்லாம் கவிதையாகிவிட்டது.
ஒரு சிறிய வேண்டுகோள், word verification பின்னூட்டம் இடுபவர்கள் விரும்பாத ஒன்று அதை எடுக்க முடிந்தால் நலம்.
 

நல்ல பதிவு. இன்றுதான் பார்க்கிறேன். ரொம்பவே அருமை. மாணவியாக இருந்த நாட்களை நினைவு கூர்ந்தேன்.
 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

பெட்டகம்">Archives

February 2007 March 2007 May 2007

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org

Subscribe to Posts [Atom]